இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 5-9-2025

Update:2025-09-05 09:18 IST
Live Updates - Page 3
2025-09-05 05:47 GMT

எனது மனதின் குரலாக பேசியுள்ளார் செங்கோட்டையன் -ஓபிஎஸ்

“எனது மனதின் குரலாக பேசியுள்ளார் செங்கோட்டையன். அனைவரும் இணைந்தால்தான் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியும்” என்று செங்கோட்டையன் பேச்சு குறித்து ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

2025-09-05 05:44 GMT

செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி -நயினார் நாகேந்திரன்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அனைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். கடைசி ஒரு மாதத்தில் கூட நடக்கும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

2025-09-05 05:42 GMT

"எனது கோரிக்கையை ஏற்றால்தான். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன்" - செங்கோட்டையன் எச்சரிக்கை

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்றால்தான். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2025-09-05 05:41 GMT

அடுத்தகட்டமாக நெருங்கிய நண்பர்களோடு ஆலோசிக்க உள்ளேன் - செங்கோட்டையன்

அடுத்தகட்டமாக நெருங்கிய நண்பர்களோடு ஆலோசிக்க உள்ளேன். இபிஎஸ் மனநிலை என்ன எனக்கு தெரியாது. என் மனநிலை, அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் விரைந்து இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே இபிஎஸ்-ன் சுற்றுப்பயணத்தில் பங்குகொள்ளவில்லை என்று செங்கோட்டையன் கூறினார்.

2025-09-05 05:39 GMT

இபிஎஸ்கூட 2009ல் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் - செங்கோட்டையன்

“எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் கருத்து சொல்லவில்லை. ஆனால் அவரே 2009-ல் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்... அது உங்களுக்கு தெரியுமா?” என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். 

2025-09-05 05:38 GMT

“எம்.ஜி.ஆர் சொல்லிக்கொடுத்த பாடம்” - செங்கோட்டையன்

"வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்.ஜி.ஆர் சொல்லிக்கொடுத்த பாடம். சகோதரப்பாசத்தோடு இணைந்து செயல்பட்டால்தான், ஆட்சி மாற்றம் கிடைக்கும். வெற்றி இலக்கும் கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

2025-09-05 05:35 GMT

 ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் செங்கோட்டையன்

வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும், புரட்சி தலைவர் நல்லாட்சி மலர ஒன்றினைத்து செயல்பட வேண்டும். வெளியே சென்றவர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் கட்சியில் இணைவதாக சொல்கிறார்கள். அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும்.எங்களது கோரிக்கையை மறுத்தால் என்னைப்போல் மனநிலை உள்ளவர்கள் ஒன்றிணைவோம்.

2025-09-05 04:30 GMT

ஆண்டிபட்டியில் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் கூட்டம் திடீர் ரத்து

தேனி ஆண்டிபட்டியில் விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பழனிசாமி நடக்கவிருந்த கலந்துரையாடல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனிசெட்டிபட்டி தனியார் விடுதியில் நடக்கவிருந்த கலந்துரையாடல் கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-05 04:21 GMT

தொண்டர்கள் படைசூழ செங்கோட்டையன்

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அதிமுக அலுவலகத்துக்கு, தொண்டர்கள் படைசூழ பரப்புரை வாகனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வந்தார். செங்கோட்டையன் செல்லும் வாகனத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்கள் மட்டும் வைக்கப்பட்டுள்ளன.

2025-09-05 04:17 GMT

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

2015ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதிக்கு முன் உரிய ஆவணங்களின்றி இந்தியா வந்து பதிவு செய்த இலங்கை அகதிகள் சட்டபூர்வமாக தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இயற்றிய குடியேற்ற மற்றும் வெளிநாட்டவர் சட்ட விதிகளின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்