திருச்சி: தவெக..,விற்கு காவல்துறை அனுமதி

தவெக தலைவர் விஜய், வரும் 13 ஆம் தேதி மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண நிகழ்ச்சியில் விஜய் பேசுவதற்கு திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.;

Update:2025-09-09 20:35 IST

திருச்சி,

தவெக தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 13-ம் தேதி முதல் பிரசாரப் பயணத்தைத் துவங்கத் திட்டமிட்டுள்ளார். திருச்சியில் வரும் 13ஆம் தேதி தனது பிரசாரப் பயணத்தைத் துவங்கும் விஜய், டிசம்பர் 20 ஆம் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தவெக சார்பில் பிரசாரத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அந்தப் பகுதிக்கு பதிலாக காந்தி மார்க்கெட், மரக்கடை பகுதிகளைத் தேர்வு செய்யும்படி காவல்துறை தரப்பில் இருந்து தவெகவுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதனை அடுத்து தற்போது திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. சாலைவலம் நடத்தக்கூடாது என காவல் துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து வரும் 13ஆம் தேதி தனது முதல் பரப்புரையைத் துவங்கும் தவெக தலைவர் விஜய் திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடையில் இருந்து அதனைத் துவங்குகிறார்.

செப்.13ல் திருச்சியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கிறார் தவெக தலைவர் விஜய்.அக்4, கோவை, அக்.11 நெல்லை, அக்.18 காஞ்சிபுரம், அக்.25-ம் தேதி சென்னையில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டிச.20 வரை நடைபெறும் சுற்றுப்பயணத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்