வைகோவின் சகோதரி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சரோஜா அம்மையாரின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர், அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.;

Update:2025-05-30 14:34 IST

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி சரோஜா அம்மையார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது;

"ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோவின் இரண்டாவது சகோதரி சரோஜா அம்மையார் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது சகோதரி மீது அளவற்ற பாசம் வைத்திருந்தவர் அண்ணன் வைகோ. தன்னுடைய உடன்பிறந்த சகோதரியை இழந்து தவிக்கும் அண்ணன் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

மேலும், சரோஜா அம்மையாரின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்