வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர்பேத்தி திருமண வரவேற்பு விழா; கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனின் பேத்தி திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது.;

Update:2025-09-27 10:40 IST

சென்னை,

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதனின் பேத்தியும், பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் சங்கர் விசுவநாதன்- ரமணி பாலசுந்தரம் தம்பதியர் மகளும், உதவி துணை தலைவருமான காதம்பரி, டாக்டர் ஏ.கோவிந்த ரெட்டி- பி.மாலினி தம்பதியர் மகன் டாக்டர் அ.ஷரவன் கிருஷ்ணா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவில் மணமக்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று பசுமைக் கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.க்கள் எஸ். ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் ஆகியோரும் வாழ்த்தினார்கள்.

அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி உள்ளிட்டோரும் தனியாக வந்து வாழ்த்தினார்கள்.

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜனதா மூத்த நிர்வாகி எச்.ராஜா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி கே.வாசன், தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘தினமலர்’ கோவை பதிப்பு வெளியிட்டாளர் எல்.ஆதிமூலம், விகடன் குழும நிர்வாக இயக்குனர் சீனிவாசன், ‘இந்து’ என்.ராம், ‘வேல்ஸ்’ பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், சத்யபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன், பசுமை தாயக தலைவர் சவுமியா அன்புமணி, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், திரைப்பட நடிகர்கள் சிவகுமார், கவுண்டமணி, நாசர், சிவகார்த்திகேயன், இயக்குனர்கள் சேரன், ஞானவேல் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் மணமக்களுக்கு வாழ்த்து கூறினார்கள்.

திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்தவர்களை வி.ஜ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், துணை தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்