சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் போக்சோவில் கைது
சிறுமியை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;
கோப்புப்படம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே 14 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் மகன் லாரி டிரைவரான பிரபு என்கிற பிரசாத்குமார் (29 வயது) என்பவர் தனது செல்போனில் மாணவி குளித்ததை வீடியோ எடுத்துள்ளார்.
அதை பார்த்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் சிறுமியை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்த பிரசாத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். அதனைத் தொடர்ந்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் பரமத்தியில் உள்ள கிளை சிறையில் அடைத்தார்.