நெல்லையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சுத்தமல்லி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 60 கிராம் கஞ்சாவை பிரவீன்குமார் விற்பனை செய்ய வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.;

Update:2025-04-27 11:21 IST

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுத்தமல்லி ரயில்வே சப்வே பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சுத்தமல்லியைச் சேர்ந்த பிரவீன்குமார் (வயது 26) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 60 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பிரவீன்குமாரை சுத்தமல்லி காவல் நிலையம் அழைத்துச் சென்று, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்