திருநெல்வேலியில் புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

அழகியபாண்டிபுரம் மெயின் ரோடு அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் சோதனை செய்தபோது அவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.;

Update:2025-06-08 21:01 IST

திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அழகியபாண்டிபுரம் மெயின் ரோடு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அந்த இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த மரியசெல்வம் (வயது 38) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மரியசெல்வத்தை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 525 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்