இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்திய 285 பேர் கைது

தென்கிழக்கு ஆசியாவின் போதைப்பொருள் கடத்தல் கூடாரமாக இந்தோனேசியா உள்ளது.;

Update:2025-06-25 03:45 IST

ஜகார்த்தா,

தென்கிழக்கு ஆசியாவின் போதைப்பொருள் கடத்தல் கூடாரமாக இந்தோனேசியா உள்ளது. எனவே அங்கு கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களும் அதிகளவில் அரங்கேறுகின்றன. இதனால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்குபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகிறது. எனினும் இது தொடர் கதையாக உள்ளது.

இதனையடுத்து போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையை அரசாங்கம் முடுக்கிவிட்டது. அதன்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் கடந்த 2 மாதங்களில் 29 பெண்கள் உள்பட 285 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சுமார் 700 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் தலைவர் மார்தினஸ் ஹுகோம் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்