அமெரிக்காவில் கார் விபத்து; இந்திய தம்பதி பலி
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வாஷிங்டன்,
இந்தியாவின் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பலகொல்லு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கிஷோர் (வயது 49). இவரது மனைவி ஆஷா (வயது 45). இவரும் ஐ.டி. ஊழியர்கள் ஆவர். இந்த தம்பதிக்கு 21 வயதில் மகளும், 16 வயதிலும் மகனும் உள்ளனர்.
இதனிடையே, கிருஷ்ண கிஷோர் குடும்பத்துடன் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடந்த மாதம் 23ம் தேதி இந்தியா வந்தார். அதன்பின்னர், துபாயில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சென்ற கிருஷ்ண கிஷோர் குடும்பத்தினர் விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்புகளை மீறி வேகமாக வந்த லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கிருஷ்ண கிஷோர், அவரது மனைவி ஆஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தம்பதியின் இரு பிள்ளைகளும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த கிஷோர் , ஆஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.