அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 100-வது வயதில் காலமானார்.;

Update:2024-12-30 08:45 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜிம்மி கார்ட்டர் (வயது 100). இவர் 1977 முதல் 1981ம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டார்.

இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர் நேற்று காலமானார். ஜார்ஜியா மாகாணம் பலின்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் ஜிம்மி காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்