குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டாத ஜப்பான் மக்கள்: வேகமாக சரியும் மக்கள் தொகை
மக்கள் தொகை சரிவால் ஏற்படும் நெருக்கடியை ‘அமைதியான அவசர நிலை’ என பிரதமர் ஷிகெரு இஷிபா அறிவித்துள்ளார்.;
டோக்கியோ,
ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே குழந்தை பிறப்பை ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. எனினும் இளைய தலைமுறையினர் குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் கடந்த ஆண்டு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் 2 மடங்கு உயர்ந்தது. கணக்கெடுப்பு தொடங்கியதில் இருந்து நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை சரிவாக இது கருதப்படுகிறது. எனவே மக்கள் தொகை சரிவால் ஏற்படும் நெருக்கடியை ‘அமைதியான அவசர நிலை’ என பிரதமர் ஷிகெரு இஷிபா அறிவித்துள்ளார்.