நாடாளுமன்ற தேர்தல்: எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

Update: 2024-04-19 01:48 GMT

சேலம்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்