2-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்தியா ஏ முன்னிலை

இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.;

Update:2025-06-09 08:51 IST

நார்த்தம்டான்,

இந்தியா 'ஏ' - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நார்த்தம்டானில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 89.3 ஓவர்களில் 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 116 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் 89 ஓவர்களில் 327 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய ஏ அணி 21 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக எமிலியோ கே 71 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 21 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய ஏ அணிக்கு இம்முறையும் ஜெய்ஸ்வால் (5 ரன்கள்) ஏமாற்றினார். பின்னர் ராகுல் - அபிமன்யு ஈஸ்வரன் கை கோர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ராகுல் 51 ரன்களிலும், அபிமன்யு ஈஸ்வரன் 80 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜுரெல் 6 ரன்களுடனும், நிதிஷ் ரெட்டி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட் சாய்த்தார். இந்திய அணி தற்போது வரை 184 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இத்தகைய சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்