ஆசிய கோப்பை: பாக்.அல்ல.. அந்த அணி மட்டுமே இந்தியாவுக்கு சவால் அளிக்கும் - பாசித் அலி

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.;

Update:2025-08-22 16:30 IST

image courtesy:PTI

கராச்சி,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் செப்.14-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டுமின்றி இந்த தொடரிலும் இந்திய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பலரது கணிப்பாக உள்ளது. இருப்பினும் பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை குறைத்து மதிப்பிட முடியாது.

இந்நிலையில் இந்த தொடரில் இலங்கை அணி மட்டுமே இந்தியாவுக்கு சவால் அளிக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இந்தியா மிகவும் வலுவான அணியாக உள்ளது. என்னை கேட்டால் இலங்கை அணியால் மட்டுமே அவர்களுக்கு சவால் அளிக்க முடியும் என்று நினைக்கிறேன்” என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்