சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்
சாம்பியன்ஸ் டிராபியில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.;
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது. ஏற்கனவே வங்காளதேசம் அணியை இந்தியா வென்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் 63 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
35 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 189/ 2
நட்சத்திர வீரர் விராட் கோலி 62 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில் 46 ரன்களில் அவுட் ஆனார்.
இந்திய அணி 17.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.
இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 64 ரன்கள் எடுத்தது.
242 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகிறது. 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழ்ப்புக்கு இந்திய அணி 31 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 20 ரன்களில் அவுட் ஆனார்.