மகளிர் உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.;

Update:2025-10-19 15:18 IST

இந்தூர்,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 20வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. மத்தியபிரதேசத்தின் இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து , இங்கிலாந்து முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்