ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ரோகித் சர்மா, விராட் கோலி விளையாட வாய்ப்பு... வெளியான தகவல்

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ம் தேதி தொடங்க உள்ளது.;

Update:2025-09-07 15:46 IST

image courtesy:PTI

மும்பை,

ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ-க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த பின்னர் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஏ அணியில் இருவரையும் சேர்க்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அவர்கள் தயாராகும் பொருட்டு பி.சி.சி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளது. பி.சி.சி.ஐ-ன் இந்த முடிவை அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டு இந்த தொடரில் விளையாட வாய்ப்புள்ளது.

ஏனெனில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டதால் ஐ.பி.எல். தொடருக்கு பின் இருவரும் எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக இந்த தொடர் நல்ல பயிற்சியாக அமையும் என்பதால் இருவரும் விளையாட வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்