இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.;

Update:2025-05-06 13:19 IST

Image Courtesy: @windiescricket

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்து (3 ஒருநாள் மற்றும் 3 டி20) மற்றும் இங்கிலாந்துக்கு (3 ஒருநாள் மற்றும் 3 டி20) சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. தற்போது இந்த தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி (ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு மட்டும்) அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது முக்கியமான சில வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகிறார்கள். ஆனால், தற்போது ஐ.பி.எல் தொடரில் விளையாடும் எந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரும் ஒருநாள் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடிக்க கூடியவர்களாக இல்லை. எனவே, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் எதிர்கால ஒருநாள் கிரிக்கெட் அணியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜுவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கோ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி. ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட். 



Tags:    

மேலும் செய்திகள்