பாகிஸ்தான் பாஜகவின் கூட்டாளி; ராஷ்டிரிய ஜனதா தளம் விமர்சனம்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன;
பாட்னா,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே, ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தரப்பு) உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் தொடர்பாக பீகார் எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பாஜகவை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக தேஜஸ்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது, பஹல்காம் தாக்குதலுக்குப்பின் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் நடைபெறுவது குறித்து பிரதமர் மோடியிடம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால் அவர்தான் தனது உடல் நரம்புகளில் செந்நிறம் பாய்வதாக பெருமையாக கூறினார். பாஜக பாகிஸ்தானின் கூட்டாளி.
பாகிஸ்தான் பாஜகவின் கூட்டாளி. ஏனென்றால் அது ராணுவ மோதலை தொடங்கி பாஜக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி பின்னர் போர் நிறுத்தத்தை அறிவித்தது. தற்போது கிரிக்கெட் விளையாட பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. இவை அனைத்தும் பாஜகவின் வசதிக்கேற்பட நடத்தப்படுகிறது
என்றார்.