உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் இறுதிப்போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோத உள்ளன.;

Update:2024-07-13 17:50 IST

image courtesy: twitter/@WclLeague

லண்டன்,

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு பர்மிங்காம் நகரில் துவங்குகிறது.

அப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்