சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை

இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, தைவானின் லின் ஹ்சியாங்-டி உடன் மோதினார்.;

Update:2025-09-16 21:07 IST

கோப்புப்படம்

ஷென்சென்,

மொத்தம் ரூ.11 கோடி பரிசுத் தொகைக்கான சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் இன்று தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. இன்று முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, தைவானின் லின் ஹ்சியாங்-டி உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லின் ஹ்சியாங்-டி 21-23, 21-11, 21-10 என்ற செட் கணக்கில் அனுபமா உபாத்யாயாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்