கும்பம் - வார பலன்கள்
கலையழகுடன் பணியாற்றும் கும்ப ராசி அன்பர்களே!
உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும் வாரம் இது. பணப்புழக்கம் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு திருப்திகரமாக அமையும். இருப்பினும் அதற்காக சில காலம் பொறுமையாக காத்திருக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவர்.
தொழில் செய்பவர்கள், கடுமையான முயற்சியை மேற்கொண்டாலும் பெரிய அளவில் லாபம் எதையும் எதிர்பார்க்க இயலாது. கலைஞர்களின் முயற்சிகளில் சிலருக்கு புதிய வாய்ப்புகளோடு, வருமானத்திற்கான வழியும் சிறப்பாக அமையும்.
பெண்கள் எல்லா வகையிலும் திருப்தியான போக்கை காண்பீர்கள். எனினும் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முதியோர் ஒருவரது ஆசி கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர் உங்களை தேடி வரக்கூடும். சுப காரியம் முடிவாகும்.
பரிகாரம்:- வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும்.