கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
தினத்தந்தி 30 Dec 2022 1:59 AM IST (Updated: 30 Dec 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

30.12.2022 முதல் 5.1.2023 வரை

மற்றவர்களை ஆதரிக்கும் குணம் படைத்த கும்ப ராசி அன்பர்களே!

உற்சாகமும், முயற்சியும் இருந்தாலும் ஒன்றிரண்டு காரியங்களில் மட்டுமே வெற்றி காண இயலும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வரவேண்டிய பணவரவு தள்ளிப்போகும்.

சொந்தத் தொழிலில் வேலைகள் அதிகரிக்கும். ஓய்வின்றி உழைப்பீர்கள். பணியில் கவனம் இல்லாமல் சில இடங்களில் தொய்வு ஏற்படக்கூடும். வரவேண்டிய தொகையை வசூலிக்க முனைப்பு காட்டுவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் சுமாரான வியாபாரம் நடைபெற்றாலும், வழக்கமான லாபம் கிடைத்துவிடும்.

குடும்பத்தில் பணப் பற்றாக்குறையினால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். கலைஞர்கள் புதிய வாய்ப்பினை பெற தீவிர முயற்சியில் ஈடுபடுவர். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்க பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை நெய் தீபமிட்டு வழிபாடு செய்வது நல்ல பலன் தரும்.


Next Story