கும்பம் - வார பலன்கள்
தன்னம்பிக்கையோடு உழைக்கும் கும்ப ராசி அன்பர்களே!
தீவிரமான முயற்சிகளோடு செயல்களில் ஈடுபடுவீர்கள். வெள்ளி மற்றும் சனிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் தடைகள் தோன்றக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயரதிகாரிகளின் ஆதரவு கிடைத்து, சில சவுகரியங்களை அனுபவிக்கக்கூடும். நண்பர்களின் வேலையையும் சேர்த்துச் செய்ய நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். ஒரு சிலர், அதிக வேலைப்பளுவால் அவதிப்படுவார்கள். கூட்டுத்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சமாளிப்பது பற்றி பங்குதாரர்களோடு கூடி ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகள் இருக்கலாம். பழைய கடன், பிரச்சினை தரலாம். கலைஞர்கள், வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உருவாகும். பங்குச்சந்தையில் ஸ்திரமில்லாத பங்குகளை வாங்கும்போது கவனம் அவசியம்.
பரிகாரம்:- ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் பிரச்சினைகள் அகலும்.