கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
தினத்தந்தி 10 Feb 2023 12:58 AM IST (Updated: 10 Feb 2023 12:59 AM IST)
t-max-icont-min-icon

உழைக்கும் எண்ணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

வெள்ளி முதல் சனிக்கிழமை காலை 10.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பண வரவு தாமதமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், புதியவர்களிடம் அலுவலகம் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

சொந்தத்தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று வேலையில் பரபரப்பாக இருப்பார்கள். செய்து கொடுத்த பணியில் ஏற்பட்ட சிறுசிறு குறைகளை நிவர்த்தி செய்து கொடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் சுமாரான லாபம் கிடைக்கும். பணப் பொறுப்பில் உள்ளவர்களை அடிக்கடி கண்காணிக்காவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களைப் பெற்றாலும் எதிர்பார்க்கும் வருமானம் இல்லாமல் போகலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சுப நிகழ்ச்சி நடைபெறும் யோகம் உண்டு.

பரிகாரம்:- ஆஞ்சநேய சுவாமிக்கு சனிக்கிழமை வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் வெற்றி தேடி வரும்.


Next Story