கும்பம் - வார பலன்கள்
தெளிவான சிந்தனை கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகம் ஏற்படும் வாரம் இது. உத்தியோகம் அல்லது கல்வி சம்பந்தமான தடைகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, அலுவலகத்தில் கேட்ட கடன் கிடைக்கலாம். சகப் பணியாளர்களால் சில நன்மைகள் வந்துசேரும்.
எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் அந்த தொழில் அவருக்கு நல்ல லாபத்தைப் பெற்றுத்தரும். இதுவரை இருந்த கடனை முழுமையாக அடைத்து, நிம்மதி பெருமூச்சு விடுவதற்கான சூழல் உருவாகும். சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது ஒன்றுதான் வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்தும். கடந்த காலத்தில் இருந்து வந்த கலக்கம் மறையும். பெண்கள், சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவர். நண்பர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்த்திடுங்கள். எந்த காரியத்தையும் நன்கு திட்டமிடுவது அவசியம்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை, சுக்ர பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.