கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 Feb 2023 1:29 AM IST (Updated: 24 Feb 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆன்மிக நாட்டம் உள்ள கும்ப ராசி அன்பர்களே!

கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றிகளைப் பெற முடியும். காரியங்களில் ஏற்படும் தடைகளைக் கண்டு மனம் சலிப்படையும். எனினும் தக்க நபரின் துணையுடன் முயற்சி மேற்கொள்வீர்கள். வருமானம் இருந்தாலும், அதற்கேற்ற செலவும் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், ஓய்வில்லாமல் உழைத்து உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவர். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். கூட்டுத்தொழில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கூட்டாளிகளுடன் நடத்திய ஆலோசனையின் பேரில் லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் சிறுசிறு குறைகள் தென்பட்டாலும், அவற்றை தீா்ப்பதற்கு குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசிப்பீர்கள். கலைஞர்கள், புதிய வேலைவாய்ப்பு கிடைத்து சுறுசுறுப்பாக இயங்குவார்கள். பங்குச்சந்தையில் புதிய நண்பர்களின் வரவும், யோசனையும் லாபத்தை ஈட்டித்தரும்.

பரிகாரம்:- வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.


Next Story