மேஷம் - வார பலன்கள்
அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்நல்ல சிந்தனை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
வியாழக்கிழமை காலை 8.41 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால், பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி, உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த கடன் தொகை வந்து சேரும். புதிய வாடிக்கையாளர்கள் மூலம் தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும். புதிய உதவியாளரை சேர்த்துக் கொள்ளத் திட்டமிடுவீர்கள். கூட்டுத்தொழிலில் கணிசமான லாபம் காணப்படலாம். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெற்று, பணிகளில் மகிழ்ச்சியாக ஈடுபடுவர். சகக்கலைஞர்களின் ஒத்துழைப்பு இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். குடும்பத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். கடன் தொல்லைகள் அகலும். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.
பரிகாரம்: குரு பகவானுக்கு வியாழக்கிழமை அன்று நெய் தீபமிட்டு வழிபட்டால் வெற்றி வந்துசேரும்.