மேஷம் - வார பலன்கள்
கற்பனைத்திறன் அதிகம் பெற்ற மேஷ ராசி அன்பர்களே!
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், உடல்நலத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு இருக்கும் நன்மதிப்பை பயன்படுத்தி, இடமாற்றம், பதவி உயர்வு போன்ற சலுகைகளைப் பெறுவீர்கள். இருப்பினும் சக ஊழியர்களால் ஏதேனும் தடங்கலும் வரலாம். தொழில் செய்பவர்கள், தொழில் வளர்ச்சியிலும், வருமானத்திலும் திருப்தி காண்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, வியாபாரத்தில் முழுதிருப்தி இருக்காது. என்றாலும் தொழிலில் நஷ்டம் ஏற்படாது என்பதால் கவலைப்படாமல் இருங்கள். கலைஞர்களுக்கு தொடர் முயற்சியால், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். கணவன்- மனைவி இடையே இணக்கமான போக்கு நிலவும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்றுமகிழ்வார்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரிய பகவானை வழிபாடு செய்து வாருங்கள்.