மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 27 April 2023 8:25 PM GMT (Updated: 27 April 2023 8:32 PM GMT)

வேலை வாங்குவதில் திறமைமிக்க மேஷ ராசி அன்பர்களே!

அதிக முயற்சிகளோடு வேலைகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்க்கும் வரவுகள் வந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படும். எந்த வேலையும், நாளைக்கு என்று தள்ளி வைக்காமல் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் வந்துசேரும். வேலையில் ஏற்பட்ட சிறு தவறால் உயரதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், நவீனக் கருவிகளால் பணிகளை விரைந்து முடித்து, வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு, வழக்கமான லாபம் குறையாது. தொழில் போட்டிகளைச் சமாளிப்பது பற்றி பங்குதாரர்களுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், பெரிய பாதிப்பு இருக்காது. கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் பெற தீவிரமாக முயற்சிப்பார்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள்.


Next Story