மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 18 May 2023 7:47 PM GMT (Updated: 18 May 2023 7:48 PM GMT)

சிந்தித்து செயல்படும்மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் முயற்சிகள் சிலவற்றில் மட்டுமே வெற்றி கிடைக்கும். தாமதமடையும் பிற காரியங்களை தக்க நபர்களின் உதவியோடு வெல்ல முயற்சிப்பீர்கள். திட்டமிட்ட பண வரவுகளும் தாமதமாக வந்தடையும். உத்தியோகத்தில் மாறுபட்ட திருப்பங்களை சந்திப்பீர்கள். புதிய அதிகாரியின் கெடுபிடி இருக்கும். சொந்தத்தொழில் வருமானம் காரணமின்றித் தள்ளிப் போகலாம். செய்த வேலையில் உள்ள குறைபாடு வாடிக்கையாளர்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. பொருட்களின் விலையேற்றம் வியாபாரத்தைப் பாதிக்கலாம். குடும்பத்தில் அமைதி இருந்தாலும், சிறு சிறு பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் நிலை வரலாம். பங்குச்சந்தையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டாம்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு, மஞ்சள் நிற மலர் மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.


Next Story