கடகம் - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்


கடகம் - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை

பொதுவாழ்வில் புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகைள ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். கண்டகச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது இருக்கின்றது. சனி பகவான் இம்மாதம் வக்ர நிவர்த்தியான பிறகு அதன் கடுமை கொஞ்சம் அதிகரிக்கின்றது. ஆரோக்கியத் தொல்லை, அருகில் இருப்பவர்களால் தொல்லை, வருமானப்பற்றாக்குறை போன்றவைகள் வரலாம். எதையும் நினைத்த நேரத்தில் செய்ய இயலாது.

சனி வக்ர நிவர்த்தி!

ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். சனி உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் வலிமை அடைவதால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்பட்டு மனக்கலக்கத்தை உருவாக்கும். ெவளிநாடு சென்று பணிபுரிய விரும்பியவர்களுக்கு அங்கு வேலை கிடைக்காமல் தத்தளிக்க நேரிடும். குடும்பப் பிரச்சினை கொடிகட்டிப் பறக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். பெற்றோர்கள் மற்றும் தாத்தா-பாட்டிகளின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். நீங்கள் கேட்காமலேயே வேறு இடத்திற்கு மாற்றம் செய்வர்.

குரு வக்ரம்!

மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மை தான். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால் சில இடையூறு சக்திகளும் வந்து அலைமோதும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழலும் உருவாகும். கவலை என்ற மூன்றெழுத்து அகல கடவுள் வழிபாடு தேவை.

நீச்சம் பெறும் சுக்ரன்!

ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். அசுர குரு நீச்சம் பெறுவது யோகம் தான். இடம், பூமி வாங்குவது, மனை கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பால் அரிய பல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதிலும் கவனம் செலுத்துவீர்கள்.

விருச்சிக புதன்!

ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் பொழுது பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். குழந்தைகளின் மேல்படிப்பு தொடர்பாக எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். உத்தியோக மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் உங்கள் மனதிற்கு பிடித்த விதம் அமையும். கடன் சுமை படிப்படியாகக் குறையும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சினை தலைதூக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கும். குடும்பத் தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:அக்டோபர் 27, 28, நவம்பர் 1, 2, 7, 8, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.


Next Story