கடகம் - வார பலன்கள்
புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்
செயல்களில் உறுதியுடன் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே!
புதன்கிழமை மாலை 4.56 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சிறுசிறு தொல்லைகள் தோன்றும். நீண்ட கால நண்பரை சந்திப்பீர்கள். புதிய திட்டங்களில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தை அடைவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காணப்படும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற்று, அதில் ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்கள். சகக்கலைஞர்களின் உதவியால் கலைப்பணியில் உயரம் தொட வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை, பெண்களே சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். விருந்து, சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
பரிகாரம்:- முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று நெய் தீபமிட்டு வழிபட்டால் வந்த வினை அகன்று விடும்.