கடகம் - வார பலன்கள்
நம்பிக்கையால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!
பணம் கொடுக்கல் - வாங்கலை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிக வேலைப்பளுவால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். முக்கிய ஆவணங்களை கவனமாக பாதுகாப்பது அவசியம்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், சுறுசுறுப்பாக பணியாற்றி, வாடிக்கையாளர்களிடம் பாராட்டு பெறுவார்கள். சிறந்த லாபம் அடைந்திட சிந்தனையைத் தீட்டுவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். லாபத்தால் மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.
குடும்ப வாழ்க்கை மேம்படும். பணவரவு தடையின்றி கிடைக்கும். தம்பதிகள் ஒற்றுமை பலப்படும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் இன்பம் சேர்த்திடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கம் நீங்கும். கலைஞர்களுக்கு விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். பங்குச்சந்தையில் அதிக லாபம் காணலாம்.
பரிகாரம்: மகாலட்சுமி தேவிக்கு வெள்ளிக்கிழமை செந்தாமரை மலர் மாலை சூட்டி வழிபட்டால் மங்கல வாழ்வு கிடைக்கும்.