கடகம் - வார பலன்கள்
உயர்ந்த எழுத்தாற்றல் படைத்த கடக ராசி அன்பர்களே!
புதன் மற்றும் வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், எந்த விஷயத்திலும் நிதானம் தேவை. அரசு பணியாளர்களும், மருத்துவர்களும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாதீர்கள்.
தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெறுவதற்கான அடித்தளத்தை இடுவீர்கள். புதிய பிரச்சினைகள் வந்து உங்களை அலைக்கழிக்கலாம். அரசியல்வாதிகள், கட்சி தாவலில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
கலைஞர்கள், சகக் கலைஞர்களின் தொழில் போட்டியை சமாளித்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் சில நேரங்களில் அமைதியும், சில நேரங்களில் சலசலப்பும் இருக்கும். விட்டுக்கொடுத்துச் செல்வது மட்டுமே மனதுக்கு அமைதியைத் தரும்.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.