கடகம் - வார பலன்கள்

வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை
செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கும் கடக ராசி அன்பர்களே!
எடுத்த காரியங்களை எளிதில் முடித்து எதிர்பார்க்கும் ஆதாயம் பெறுவீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். இதுவரை கைக்கு வராமல் இருந்த தொகை கிடைத்து, நின்று போயிருந்த பணிகளைத் தொடருவீர்கள்.
சொந்தத்தொழிலில் புதிய முறைகளைப் புகுத்த வழிமுறைகளை தெரிந்து கொள்வீர்கள். தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கு துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். கூட்டுத்தொழிலில் கூடுதலான ஆதாயம் கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் ஏற்பட்டு பரவசமடைவீர்கள். கலைஞர்கள் களிப்படையும்படி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
குடும்பத்தில் மனதுக்கு பிடித்தமான சம்பவங்கள் நடைபெறும். கடன் கொடுத்தவர்களைச் சந்தித்து அவர்களின் கசப்பை மாற்று வீர்கள். பெண்களுக்கு பழைய பகை மறையும். சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.
பரிகாரம்: புதன்கிழமை அன்று பெருமாளுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டால் திருப்பங்களை சந்திக்கலாம்.