மகரம் - வார பலன்கள்
தர்மம் செய்வதில் ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே!
காரியங்கள் பலவற்றில் அதிக முயற்சியோடு செயல்பட்டு முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் பணவரவுகள் எளிதாக வந்து சேரும். உத்தியோகத்தில் பொறுப்புள்ள பதவிகள் சிலருக்கு கிடைக்கும். செல்வாக்கு அதிகமாகும். வரவேண்டியவை கைவரப்பெற்று வசதியான வாழ்வுக்கு அடிகோலும். சொந்தத் தொழில் சிறப்படையும் வண்ணம் வாடிக்கையாளர்கள் பெருகுவர். பணவசதியால் நவீனக்கருவிகளின் உபயோகமும், அதனால் பணிகளை விரைந்து செய்யும் திறமையும் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். வியாபார ஸ்தலத்தை விரிவாக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தினரால் மன வருத்தம் உண்டாகலாம். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். பங்குச்சந்தை வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு, சிவப்பு வண்ண மலர் சூட்டி, நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள்.