மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:37 AM IST (Updated: 4 Aug 2023 12:47 AM IST)
t-max-icont-min-icon

4.8.2023 முதல் 10.8.2023 வரை

சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி காணும் மிதுன ராசி அன்பர்களே!

முயற்சியோடு செய்யும் செயல்களில் வெற்றி அடைவீர்கள். மிக முக்கியமான காரியங்களில் அதிகக் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். உத்தியோகத்தில் சிலருக்கு, அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய கடன் தொகைகள் கைக்கு வந்துசேரும். அதனைக் கொண்டு நிறுத்தியிருந்த பணிகளை தொடர்வீர்கள்.

சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், அவர்களால் தொழில் முன்னேற்றமும் ஏற்படும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணத்தை வசூலிக்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு கடன் தொல்லைகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். பெண்கள், தங்கள் உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று மகிழ்வர்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.


Next Story