மிதுனம் - வார பலன்கள்
வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை
எதையும் எளிதில் சாதிக்கும்மிதுன ராசி அன்பர்களே!
நீங்கள் எடுத்துக் கொண்ட செயல்கள் சில தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வோ, சம்பள உயர்வு குறித்தோ கோரிக்கை வைக்க சிறிது காலம் பொறுமையாக காத்திருப்பது நல்லது. சொந்தத் தொழில் நன்றாக நடைபெற கடுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது பிரச்சினைகளைத் தவிர்க்கும். புதிய கிளை தொடங்கும் முயற்சியை சிறிது தள்ளிப்போடுவது நல்லது. பங்குச்சந்தையில் வியாபாரம் சுமாராக நடைபெறும்.
கலைஞர்கள் பணியாற்றும்போது கவனமாக இருப்பது அவசியம். குடும்பம் நன்றாக நடந்து வந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கக்கூடும். உறவினர் ஒருவரின் வருகையால் பிரச்சினை மறையக்கூடும். பெண்களுக்கு தாயார் சொத்துகள் வந்து சேரலாம்.
பரிகாரம்:- புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் மங்களகரமான வாழ்வு மலரும்.