மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 5 May 2023 1:35 AM IST (Updated: 5 May 2023 1:36 AM IST)
t-max-icont-min-icon

உறுதிமிக்க உள்ளம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

வியாழக்கிழமை அன்று சந்திராஷ்டமம் உள்ளதால், செய்யும் பணிகளில் உற்சாகத்துடன் வெற்றிஅடைந்தாலும் சில காரியங்களில் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. பணவரவுகள் திட்டமிட்டபடி வந்தாலும், செலவுகள் அதிகமாகும். வெளியூர் பயணம் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, நின்று போன பணியை தொடருவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய ஒப்பந்தங்களால் ஓய்வின்றி பணியாற்றும் நிலை ஏற்படும். கூட்டுத்தொழில் வியாபாரம் எதிர்பார்க்கும் லாபம் தரும். குடும்பம் சீராக நடைபெற்று வரும். குல தெய்வ வழிபாடுகள் செய்ய திட்டமிடுவீர்கள். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களில் மகிழ்வுடன் ஈடுபடுவர். பங்குச்சந்தை நன்றாக நடைபெற்று லாபம் ஈட்டித் தரும்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.


Next Story