மிதுனம் - வார பலன்கள்
சிந்தித்து காரியங்களை சாதிக்கும் மிதுன ராசி அன்பர்களே!
புதுமைகள் படைக்கும் வாரம் இது. நன்றி மறவாமல் நடக்கும் சிலரை நினைத்து மகிழ்வீர்கள். தந்தை, தாய் உடல்நலனில் கவனம் தேவை. எதிர்பாராத திருப்பங்களால் உற்சாகம் கூடும். வெளியூர் பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கலாம். வீண் பேச்சுகளைத் தவிர்த்து காரியங்களில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் புதிய திருப்பம் காண்பீர்கள். அவசரம் காரணமாக கூடுதல் வேலைப்பளு வந்துசேரும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெற்று மகிழ்வர். கூட்டுத்தொழில் லாபம் அதிகரிக்கும். தொழில் ரீதியான தேக்க நிலை அகன்று சுறுசுறுப்பு ஏற்படும். முதலீடுகளை அதிகரிப்பீர்கள். பணம் அதிகம் நடமாடும் இடங்களில் கண்காணிப்பு அவசியம். குடும்பப் பிரச்சினைகளில் பெரியவர்கள் ஆலோசனை தேவை. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை நவக்கிரகத்தில் உள்ள சுக்ரனுக்கு, மலர் மாலை சூட்டி வழிபடுங்கள்.