சிம்மம் - வார பலன்கள்
கலைகளில் ஈடுபாடு காட்டும் சிம்ம ராசி அன்பர்களே!
சில காரியங்கள் வெற்றிபெறத் தேவையான உதவியும், பண வரவும் தாமதம் ஆகும். விருந்தினர்கள் வருகையால் செலவு அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, முயற்சியின் பேரில் பணவரவு வந்து சேரும். சகப் பணியாளர்களுடன் பேசும்போது, வார்த்தைகளில் கவனமாக இருங்கள். தேவையற்ற பேச்சு பிரச்சினையில் முடியலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், பணிகளைக் குறித்த காலத்தில் செய்து கொடுக்க முடியாமல் போகலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு, எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு பலன் தரும். பங்குதாரர்களுக்குச் சேரவேண்டிய தொகையைக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் புதிய பொருட்களின் வருகை இருக்கும். வேலைக்குப் போகும் பெண்களுக்கு, ஊதிய உயர்வு கிடைக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்றாலும், போதிய வருமானம் இருக்காது.
பரிகாரம்:- இந்தவாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.