சிம்மம் - வார பலன்கள்
உள்ளத்தில் உறுதியும், நல்ல மனமும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
தீவிர முயற்சியோடு செயல்பட்டு சில காரியங்களில் நல்ல பலன்களை அடைவீர்கள். அதேநேரம் உங்களுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், பணப் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் தேவை. பணம் வருவதற்கு முன்பே செலவுகள் காத்து நிற்கும்.
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். விடுமுறையில் சென்ற சகப் பணியாளரின் வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டிய நிலை உருவாகும். வரவேண்டிய அலுவலகப் பணம் தள்ளிப் போகலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிக வேலையினால் தொல்லைப்பட நேரலாம். செய்து கொடுத்த வேலையில் இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முற்படுவீர்கள். குடும்பத்தில் பழைய கடன் தொல்லை தரலாம். மூத்த உறுப்பினர்களுக்கு ஆரோக்கிய குறை ஏற்படலாம். கலைஞர்கள் பழைய வாய்ப்புகளிலேயே தேவையான வருவாயைப் பெறுவார்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு, நெய்தீபம் ஏற்றிவைத்து வணங்கி வாருங்கள்.