ஜூன் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத பலன்களை பார்ப்போம்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே!
குறித்த நேரத்தில் செல்பவர் நீங்கள். அதைப் போன்று மற்றவரிடமும் நீங்கள் இதனை எதிர்பார்ப்பவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகதர்களுக்கு; நீங்கள் உயர் அதிகாரிகள் சொன்ன பணியை உடனுடக்குடன் செய்து முடித்தால் தங்களுக்கு நல்ல மரியாதையும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு; வியாபாரிகளுக்கு கவலை வேண்டாம். தங்களின் சிறு தொழிலை விரிவாக்க தங்களுக்கு முதலீட்டுக்கு வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். அதற்குண்டான முயற்சியில் ஈடுபடுங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு; தாங்கள் அடகு வைத்து தங்கள் கணவருக்கு தந்த கடனை இந்த மாதத்தில் ஒரு பகுதியை அடைத்து விடுவீர்கள். ஒரு சில நகைகளை மீட்டுவீர்கள்.
கலைஞர்களுக்கு; கலைஞர்களுக்கு அடுத்த நிலை என்ற அளவிற்கு சம்பளம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கதாநாயகர் வாய்ப்பு அல்லது அதற்கு இணையான வாய்ப்பும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு; மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் வெளியில் செல்லும் போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. வண்டி வாகனம் ஓட்டும்போது தாங்கள் வேகத்தை குறைப்பது நல்லது.
பரிகாரம்
வியாழக் கிழமை அன்று மஞ்சள் மலர் மாலையை தஷிணா மூர்த்தியை அணிவித்து வழிபடுவது நல்லது.
மகரம்
மகர ராசி அன்பர்களே! விரைவாக மற்றவர்களுக்கு கற்றுத் தரும் சுறுசுறுப்புக் கொண்டவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு தங்களுடன் வேலை பார்க்கும் உங்கள் சக ஊழிர்களிடம் சட்டென்று சினத்தை காட்டாமல் சாந்தமாக அவர்களை அனுகுவது நல்லது
வியாபாரிகளுக்கு; வியாபாரிகள் தாங்கள் செல்லும் ஊர்களில் தாங்கள் கவனக்குறைவாக இராமல் தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் எடுத்துச் செல்வது நல்லது.
குடும்பத் தலைவிகளுக்கு; குடும்பத் தலைவிகள் தங்களின் பிள்ளையின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பாடுபடுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கலைஞர்களுக்கு; கலைஞர்கள் என்றால் சினிமா மற்றும் சின்னத்திரை மாத்திரம் அல்ல மேக்கப் மேன், காஸ்ட்யூம் டிசைனர், டான்ஸ்மாஸ்டர் மற்றும் கேமரா மேன் போன்றவர்களும் அடங்குவர். அவர்களுக்கு இந்த மாதம் பணவரவுக்கு தடையில்லாமல் அமையும்.
மாணவர்களுக்கு; மாணவர்கள் தங்களுக்கு அதிக மதிப்பெண்களை பெற வேண்டுமானால் வீட்டில் அடிக்கடி எழுதி பார்ப்பது நல்லது. நன்கு படித்து இவ்வாறு எழுதி பார்த்தால் தங்களுக்கு முதல்வகுப்பில் சேருவீர்கள்.
வழிபாடு; ராகு பகவானுக்கு ராகு காலத்தில் வெள்ளிக் கிழமை அன்று பால் முட்டை போடுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே!யாரையும் பகைக்காதே என்ற தாரக மந்திரம் கொண்டவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு கடுமையான வேலையையும் தாங்கள் கண்சிமிட்டும் நேரத்தில் செய்து முடிப்பதால் தங்களுக்கு நற்பெயரும் தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் அது வழிவகுக்கும்.
வியாபாரிகளுக்கு; இருக்கும் தொழிலை விட்டுவிட்டு தெரியாத தொழிலில் அனுபவமின்றி செயல்படாதீர்கள். தெரிந்த தொழிலை செய்யுங்கள். ஒரு நாள் முன்னேற்றம் அடையும்.
குடும்பத் தலைவிகளுக்கு; வீட்டில் மாமியார் மருமகள் உறவுகளில் பிரச்சினை ஏற்படும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். தங்கள் கவனத்தை மற்ற வழியான வீட்டில் இருந்து கொண்டு செய்யும் தொழில்களான டைலரிங், பொம்மை தொழில் போன்ற சுயதொழிலை ஆரம்பியுங்கள்.
'கலைஞர்களுக்கு; கலைஞர்களுக்கு படப்பிடிப்பு தாமதப்பட்டாலும் தங்களுக்கு நல்ல முக்கியமான வேடமாக அமையும். தங்களின் பெயர் சொல்லும் வகையில் அது அமையும். காத்திருப்பது தவறல்ல.
மாணவர்களுக்கு; மாணவர்கள் ஆசிரியரை கேலி கிண்டல் செய்வதை தவிர்ப்பது நல்லது. மரியாதை கொடுப்பது நல்லது. அது தங்களின் எதிர்கால கேரக்டரை நிர்ணயிக்கும்.
பரிகாரம்
பச்சைஅம்மனுக்கு புதன் கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.
மீனம்
மீன ராசி அன்பர்களே! கழுவுற மீனில் நழுவுற மீன் நீங்கள்தான் என்றால் மிகையாகாது.
சிறப்புப்பலன்கள் உத்யோகதர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு; வேலைச்சுமை அதிகரிக்கும். கவனக்குறைவின்றி அதனை செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கலாம்.
வியாபாரிகளுக்கு; வியாபாரிகளுக்கு பண நடமாட்டம் சற்றே கவலை தருமே என்றாலும் புதிய கடன்களைப் பெறாமல் ஏற்கனவே உள்ள சேமிப்புகளின் மூலம் சமாளித்துக் கொள்வீர்கள். பணியாளர்களை அரவனைத்துச் செல்லுங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு; குடும்பத் தலைவிகளுக்கு வீட்டிற்குத் தேவையான சமையலறைப் பொருட்களை வாங்கிவிடுவர். தம்பதிகளிடையே ஒற்றுமை பலப்படும்.
கலைஞர்களுக்கு; ஒரு சிலருக்கு ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் மாதமாக அமையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கவலையைவிடுங்கள்.
மாணவர்களுக்கு; மாணவர்கள் ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகங்களை கேட்க வெட்கப்பட வேண்டாம். அன்றன்றே சந்தேகத்தை தீர்த்துக் கொண்டால் தாங்கள் அதிக மதிப்பெண்களை பெற உதவும்.
பரிகாரம்
சனிபகவானுக்கு சனி கிழமை சனி காயத்ரி மந்திரத்தை படித்து வணங்குவது நல்லது.