ஜூன் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்


ஜூன்  மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
x
தினத்தந்தி 1 Jun 2025 8:12 AM IST (Updated: 1 Jun 2025 8:13 AM IST)
t-max-icont-min-icon

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத பலன்களை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் உள்ளதை உடைத்த தேங்காய் போன்று பளிச்சென்று சொல்ல தயங்காதவர் நீங்கள்!

சிறப்புப் பலன்கள் உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடம் எந்த பாகுபாடுமின்றி இருப்பது தேவையற்ற பகையை ஒழிக்கும். ஏற்றத் தாழ்வினை பார்க்காமல் அவர்களுடன் சுமூகமாக பழகி வருவதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வியாபாரிகளுக்கு; மளிகைக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் உயரும். வியாபாரிகள் தங்கள் கொள்முதலை பெருக்குவீர்கள். சேமிப்பும் கூடும்.

குடும்பத் தலைவிகளுக்கு; குடும்பத்தலைவிகள் கணவன், மனைவி இணைந்து செயல்பட்டு குடும்ப நலனுக்கு பாடுபடுவர். இந்த கால கட்டத்தில் தங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படும். ஆதலால், சிக்கன நடவடிக்கையை எடுப்பீர்கள்.

கலைஞர்களுக்கு; தாங்கள் நினைத்த கதாபாத்திரமும் கிடைக்கும். தங்கள் திறமையை அதிகரிக்க ஒரு சிலர் கூத்துப் பட்டரையில் சேருவீர்கள்.

மாணவர்களுக்கு; அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பில் கவனமுடன் படித்து எழுதி பார்ப்பது மிக நல்லது. நேரத்தை வீணடிக்காமல் வெளியே சுற்றித் திரியாமல் படிப்பது தேர்வு சமயத்தில் மிகவும் சுலபமாக இருக்கும்.

பரிகாரம்-லக்ஷ்மி நரசிம்ம பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

ரிசபம்

ரிஷப ராசி அன்பர்களே!

அன்பு செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே. தாய் பாசமிக்கவர்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு; சம்பளம் சரிவர வராமல் அதாவது காலம் தாழ்த்தி கொடுத்து வந்த சம்பளம் இனி மாத ஆரம்பத்திலேயே கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு;தேவையற்ற காலவிரையத்தை அது தவிர்க்கவும். காரணம் தங்களுக்கு அடிக்கடி மறதி வந்து போகும். தங்கள் வேலைகளை டைரியில் எழுதி வைத்துக் கொண்டு திடடமிட்டு செயல்படுங்கள்.

குடும்பத் தலைவிகள் தாங்கள் எதிர்பார்த்தவாறு தங்களுடைய இதுவரை சேர்த்து வைத்த நகை சீட்டில் தங்களுக்கு புதிய நகை வாங்குவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

கலைஞர்களுக்கு; ஒரு சிலர் தாங்கள் திரைப்படத்தில் சேருவதற்காக ஒரு தொகையை தயாப்பாளருக்கு தர முடிவெடுப்பீர்கள். இருப்பினும் அந்த திரைப்படபேனரை பற்றி நன்கு ஆராய்ந்து செய்வது நல்லது.

மாணவர்களுக்கு; ஐ.ஏ.எஸ் படிப்புக்காக தற்போதிலிருந்தே பொது அறிவு விசயங்களை தெரிந்து கொள்வது நல்லது. மாணவர்கள் அதற்குண்டான குருப்பை தேர்வு செய்வது நல்லது.

பரிகாரம்-முருகருக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.

****************

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே!

குடும்பத்திற்காக தியாகம் செய்யக் கூடியவர். கணக்குப் பார்த்து செலவு செய்பவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு; மார்கெட்டிங் பிரிவில் வேலை செய்யும் உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக தாங்கள் கேட்ட சில முக்கியமான சலுகைகள் கிடைக்கும். கவலை வேண்டாம். இந்த மாதம் மகிழ்ச்சிற்கு குறைவிருக்காது.

வியாபாரிகளுக்கு; கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஏனெனில் தங்களிடம் வியாபாரிகள் கடன் கேட்பார்கள் கொடுத்து விட்டு பின்பு வருந்துவதை விட கொடுப்பதை தவிர்க்கவும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு பணம் தேவைக்கேற்ப கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். உறவினர், விருந்தினர் வருகை ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் கனவு பலிக்கும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வேற்று மொழிகளில் நடிக்க அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு சோம்பேறித்தனம் குடிக்கொள்ளும். ஆதலால், தாங்கள் கூடுமானவரை சோம்பேறித்தனத்தை புறக்கணியுங்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்

அம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.

கடகம்

கடக ராசி அன்பர்களே!

வீட்டிற்கு வருபவர்களை நன்கு உபசரிக்கத் தெரிந்தவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு; உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் தங்கள் வேலையில் சிறு சிக்கல்கள் ஏற்படும். அதனை அழகாக செய்து முடித்து தாங்கள் தங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.

வியாபாரிகளுக்கு; நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இந்த மாதம் தங்களுக்கு இருக்கும். வியாபாரம் சூடுபிடித்து அதில் அதிக லாபத்தினை பெறுவீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் தங்கள் கணவரின் உடல் நலனுக்காக பல விசயங்களை விட்டுக் கொடுப்பீர்கள். மாமியாரை மதித்து கணவனின் அன்பை பெறுவீர்கள். குடும்பத் தலைவிகள் வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு படம் முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் இருப்பவர்களுக்கு இந்த மாதல் திரையிடும் தேதி அறிவிக்கப்படும். மேலும், புதிய வாய்ப்புகளும் கதவைத் தட்டும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் விளையாட்டுத்தனத்தை கைவிட்டுவிட்டு தாங்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். அது தங்கள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்

அங்காள அம்மனுக்கு முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.




1 More update

Next Story