ஜூன் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்


ஜூன் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
x
தினத்தந்தி 1 Jun 2025 8:22 AM IST (Updated: 1 Jun 2025 4:23 PM IST)
t-max-icont-min-icon

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத பலன்களை பார்ப்போம்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே!

யாரிடமும் உடனுக்குடன் நட்பு பாராட்ட தெரியாதவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகதர்களுக்கு ;வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் மேலதிகாரிகளின் அன்பை பெற தாங்கள் குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடித்துக் காட்டினீர்கள் என்றால் அவர்கள் நட்பை பெற இயலும்.

வியாபாரிகளுக்கு; வியாபாரிகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் தங்களின் வியாபாரத்தை விரிவு செய்வதற்காக பயணங்கள் மேற்கொள்வர். இதனால் தங்கள் வியாபாரம் மற்ற ஊர்களிலும் செழித்து வளர இந்த பயணங்கள் சாதகமாக இருக்கும்.

குடும்பத் தலைவிகளுக்கு; குடும்பத்தலைவிகள் தங்கள் உழைப்பிற்கு வீட்டில் அங்கீகாரம் தரவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு இனி வீட்டில் மதிப்பு அளிப்பர். கணவரது தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

கலைஞர்களுக்கு; கலைஞர்கள் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்கள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடியுங்கள். பின்பு அதுவே, பெரிய வாய்ப்பினைப் பெற்றுத் தரும்.

மாணவர்களுக்கு; மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் விடுமுறையில் வெளியூர் செல்ல சிறுகச் சிறுக சேர்த்து வைப்பீர்கள், படிப்பிலும் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள்.

பரிகாரம்

சிவ பெருமாளை ஞாயிற்றுகிழமை அன்று ராகுகாலத்தில் தரிசிப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே!

தொழில் செய்யும் திறன் மிக்கவர் நீங்கள். உழைப்பதற்கு அஞ்சாதவர்.

சிறப்புப் பலன்கள்;

உத்யோகஸ்தர்களுக்கு; உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்கள் வேலையை பகிர்ந்து கொண்டு தங்களின் பேரன்பை பெறுவர். குடும்பமாக பழகுவார்கள்.

வியாபாரிகளுக்கு; வியாபாரம் செய்யும் இளைஞர்களுக்கு அடிக்கடி குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். முதலில் செலவுகள் அதிகமாக இருந்தாலும் தங்களுக்கு இனி வருங்காலத்தில் அது ஒரு அடித்தளமாக அமைந்துவிடும்.

குடும்பத் தலைவிகளுக்கு; பலகாலமாக கற்பனை செய்து வைத்துக் கொண்டிருந்த வீடு கட்டும் பணி நிறைவேறும். குடும்பத் தலைவி தங்கள் கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள்.

கலைஞர்களுக்கு; கலைஞர்களுக்கு பல காலமாக தாங்கள் பட வாய்ப்புக்காக அலைந்து திரிந்தீர்கள். அதன் வெளிப்பாடு தங்களுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்

மாணவர்களுக்கு; மாணவ மாணவிகள் தங்களது சகமாணவர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதத்தில் கலந்து கொள்ள வேண்டாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்

திருவேற்காடு மாரியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

துலாம்

துலா ராசி அன்பர்களே!

தராசு போன்று நேர்மையானவர் நீங்கள். யாருக்காகவும் பரிந்து கொள்ளமாட்டீர்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு; உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வதாலும் மற்றும் தங்கள் கடமையை சரிவர செய்வதாலும் தங்கள் மேலதிகாரிகள் தங்களிடம் நெருக்கமாவர்.

வியாபாரிகளுக்கு; வியாபாரத்திற்காக வெளிநாட்டு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு, தாங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அதனை குறித்த நேரத்தில் தாங்கள் அனுப்பி வைத்துவிடுவீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு; குடும்பத் தலைவிகள் சுய உதவி குழுவில் இணைந்து விடுவர். அதில் புதிய சலுகைகளை பெறுவீர்கள். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு; கலைஞர்களுக்கு லொகேஷன் பார்ப்பதற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். மற்ற மற்ற கதாபாத்திரம் தேர்வு செய்வதும் இந்த மாதம் நடைபெறும்.

மாணவர்களுக்கு; மாணவர்கள் எப்போதும் தாங்கள் எதிர்பாலினரிடத்தில் அதிக நெருக்கமாக பழக வேண்டாம். அது தங்களை பாதிக்கும். ஆதலால், தங்கள் எதிர்கால இலக்கை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்

லஷ்மி நரசிம்மருக்கு துளசி மாலையை சனிக் அன்று சாத்தி வணங்குவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!

வெளியே பார்ப்பதற்கு தேள் போன்று இருந்தாலும் உண்மையில் நீங்கள் ஒரு குழந்தையே.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு; உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் குடும்ப வருவாய் பெருகும் காலமிது. தாங்கள் நினைத்தவாறே விரும்பிய இடத்தில் தங்களுக்கு இடமாற்றத்துடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு; ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். கோபப்பட்டால் தங்களின் உடல் நலம்தான் கெடும் என்பதை உணருங்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு; குடும்பத்தில் செலவு செய்யும் போது தாங்கள் கவனமாகவும் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் சில விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கலைஞர்களுக்கு; கலைஞர்கள் ஒரு சிலருக்கு ஆடத் தெரியாமல் இருக்கலாம். இதனால், பல பட வாய்ப்புகள் தட்டி போய் இருக்கலாம். ஆதலால், அதற்குண்டான பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.

மாணவர்களுக்கு; மாணவர்கள் அடுத்ததடுத்த பாடப்பகுதியை சீக்கிரம் ஆசிரியர் முடிக்க இருப்பதால், தாங்கள் அன்றைய பாடங்களை அன்றே ஒருமுறையாவது படித்துவிடுவது நல்லது.

பரிகாரம்

பைரவருக்கு செவ்வாய் கிழமை அன்று அவரது பாதத்தில் மிளகு வைத்து வழிபடுவது நல்லது.



1 More update

Next Story