மே மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான மே மாத பலன்களை பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!
கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும் என்பது உங்களுக்குத்தான் பொருந்தும்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த தொகை மற்றும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு தாங்கள் விரும்பிய இடத்தில் தங்களுக்கு வேலை கிடைக்கும்.
வியாபாரிகள் அதிகமான மூலப்பொருட்களை தாங்கள் கொள்முதல் செய்ய வெளியூரிலிருந்து வரவழைப்பீர்கள். அதனால் அதிகமான லாபத்தை ஈட்டுவீர்கள்.
ஒரு முக்கியமான தொழில் முதலீட்டிற்காக தாங்கள் தங்கள் நகையை அடகு வைத்து தங்கள் கணவருக்கு தருவீர்கள். பின்பு நகைகளை மீட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் உண்டாகும். குடும்பத்துடன் விருந்து விழா என்று சென்று வருவீர்கள். இடுப்பில் வலி வந்து போகும்.
கலைஞர்களுக்கு
இந்த மாதம் குறிப்பாக கலைக்குரிய சுக்கிரன் பாதகமாக இருப்பதால் உங்கள் திறமைகளை அதிகரிக்கவும். எந்த வேடமாக இருந்தாலும் அதனை ஏற்று நடியுங்கள்.
மாணவ மணிகள் நல்ல துறையில் சேர வேண்டும் என்றால் தாங்கள் சற்று கூடுதல் உழைப்பினைப் போடுவது நல்லது. திரும்ப திரும்ப படிப்பது நல்லது.
பரிகாரம்
முருகருக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.
ரிசபம்
ரிசப ராசி அன்பர்களே!! ஆடை ஆபரணங்களை விரும்புபவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு:
வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்கள் நீங்கள் உயர் அதிகாரிகள் சொன்ன பணியை உடனுடக்குடன் செய்து முடித்தால் தங்களுக்கு நல்ல மரியாதையும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு;
வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். எனவே, ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு;
திருமணத்திற்காக காத்திருக்கும் தங்கள் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறும். தங்கள் கணவரின் உடல் நிலையில் கவனம் கொள்வது நல்லது. அவரது உடலில் எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் அதிகமான இனிப்பு பொருட்களை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கலைஞர்களுக்கு;
கலைஞர்கள் தங்கள் சக கலைஞர்களுடன் வெளியூர் படபிடிப்புக்காக செல்வீர்கள். அங்கு நல்ல தொகை கிடைக்கும். உடல் நலம் மிகவும் நன்றாக இருக்கும்.
மாணவர்களுக்கு;
பள்ளி ஆசிரியர் தலைமையில் கல்விச் சுற்றுலா செல்பவர்கள் நீர் நிலைகளின் அருகில் செல்லாமல் இருப்பது அவசியம். ஆசிரியரின் பேச்சைக் கேட்டு நடப்பது தங்களுக்கு நன்மையை அளிக்கும். பரிகாரம் பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் துளசி மாலையை கொடுப்பதும் நல்லது.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!!
நீங்கள் பொறுமையும் நம்பிக்கையுடனும் வாழ்பவர்.பொறுத்தார் பூமியாள்வார் என்பதை உணர்ந்தவர்.
சிறப்புப் பலன்கள்
உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் தங்களுக்கு ஒரு சிலருக்கு சம்பள பாக்கித் தொகைகள் தாமதமாக வருபவர்களுக்கு இனி சீக்கிரம் வரவதற்குண்டான வேலைகள் நடக்கும். இனி மாத ஆரம்பத்திலேயே கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு,
வியாபாரத்திற்காக ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அதனை குறித்த நேரத்தில் தாங்கள் அனுப்பி வைத்துவிடுவீர்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு,
கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.
கலைஞர்களுக்கு,
கலைஞர்களுக்கு தங்கள் முயற்சியால் பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வருவதும், அதில் முக்கிய கதாபாத்திரமும் கிடைக்கும். கவலை வேண்டாம்.
மாணவர்களுக்கு,
மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். தேவையற்ற கெட்ட பெயர்களை வாங்காதீர்கள். அது உங்களது பெற்றோர்களுக்கும் கவலையைத் பரிகாரம் சிவ பெருமாளை ஞாயிற்றுகிழமை அன்று ராகுகாலத்தில் தரிசிப்பது நல்லது.
கடகம்
கடக ராசி அன்பர்களே!
யாராக இருந்தாலும் மற்றவர்களை உபசரிக்கும் குணம் கொண்டவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். வேலைச்சுமை குறையும். தொடர்ந்து வரக் கூடிய வேலைகளை அந்த பொழுதில் முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். தேகம் பளிச்சிடும்.
வியாபாரிகளுக்கு அதிகமான விற்பனை கூடி தங்களுக்கு நல்ல லாபத்தை தாங்கள் எதிர்பார்க்கலாம். புதிய பொருள் ஒன்றை தாங்கள் விற்பனை செய்வதற்கு ஆயத்தமாவீர்கள். ஒரு சிலர் கிளைகள் துவங்கவும் செய்வர்.
குடும்பத் தலைவிகளுக்கு,
குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். தங்கள் சொல்லிற்கு மதிப்பு உண்டு.குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் சில விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவரது உடல் நலம் மேம்படும். தங்கள் மாதவிடாய் வலி வந்து போகும்.
கலைஞர்களுக்கு,
திரைப்பட தொடர்பில் இருக்கும் வழக்கமாக உள்ள தொடர்புகள் தொடர்ந்து வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.
மாணவர்களுக்கு,
மாணவர்கள் அன்றாட பாடங்களை அன்றன்றே படித்து வந்தால் மட்டுமே தேர்வுகளில் வெற்றி வாகையை சூடலாம். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது மிகவும் அபத்தமானது.
பரிகாரம்
பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.