மீனம் - ஆண்டு பலன் - 2023


மீனம் - ஆண்டு பலன் - 2023
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரை)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

ஏழரைச் சனி தொடங்கும் நேரம்

மீன ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டில் உங்களுக்கு ஏழரைச் சனி தொடங்க இருக்கிறது. மேலும் இந்த ஆண்டில் குருப்பெயர்ச்சி மற்றும் ராகு - கேது பெயர்ச்சிகளும் நிகழவிருக்கின்றன. மார்ச் மாதம் வரை லாப ஸ்தானத்தில் வீற்றிருக்கும் சனி, ஏப்ரலுக்கு மேல் விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே ஏப்ரலுக்கு மேல் விரயங்கள் அதிகமாக இருக்கும். மனக் குழப்பங்கள் ஏற்படும். இடமாற்றம், உத்தியோக மாற்றங்க ளைப் பற்றிச் சிந்திப்பீர்கள். எதிர்மறை சிந்த னைகள் அலைமோதும். ஏழரைச் சனி எத்த னையாவது சுற்று வருகிறது என்பதை அறிந்து, அதற்குரிய வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது.

புத்தாண்டு கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் ராசிநாதன் குரு, உங்கள் ராசியிலேயே இருக்கிறார். தன ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். தனாதிபதி செவ்வாய் வக்ரம் பெற்று மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தானத்தில் சூரிய னோடு புதன் இருக்கிறார். லாப ஸ்தானத்தில் சனி, சுக்ர சேர்க்கை உள்ளது. சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. இப்படிப் பட்ட கிரக அமைப்போடு இந்தப் புத்தாண்டு தொடங் குகிறது.

புத்தாண்டு தொடக்கத்தில் குரு, உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். உங்கள் ராசிநாதனான அவரது பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானம் புனிதமடைவதால், வருடத் தொடக்கம் வசந்தமாக இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார நிலை உயரும். புதிய பொறுப்புகள் வந்துசேரும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பர். உடல்நலத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் அவற்றைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள். கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து காரியங்களில் வெற்றி பெறும் நேரம் இது.

கும்ப - சனி சஞ்சாரம்

29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சி யாகிறார். 24.8.2023 அன்று மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வரும் அவர், 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் கும்ப ராசியிலும், மகர ராசியிலும் வக்ர இயக்கத்தில் சஞ்சரித்து, எண்ணற்ற மாற்றங்களை தரப்போகிறார். வருமானம் ஒருபுறம் வந்தாலும், விரயங்களும் அதிகரிக் கவே செய்யும். குடும்ப உறுப்பினர்களின் தேவை அதிகரித்து, அதனால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். ஆரோக்கிய சீர்கேடுகள், ரண சிகிச்சைகள், குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தொல்லைகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிபுரியும் இடத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால், பிரச்சினைகள் ஏற்படலாம். அனுபவஸ்தர் களின் ஆலோசனைகளைக் கேட்டு, காரியங்களைச் செய்வதால் நன்மை களைப் பெற இயலும்.

மேஷ - குரு சஞ்சாரம்

22.4.2023 அன்று குரு பகவான், அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகப் போகிறார். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த இடங்கள் புனித மடைகின்றன. 6-ம் இடத்தில் குரு சஞ்சரிப்ப தால் ஜீவன ஸ்தானம் பலப்படுகிறது. எனவே வேலையில்லாதவர் களுக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு தொழில் அமையும். தற்காலிகப்பணியில் உள்ளவர்கள், நிரந்தரப் பணியாளராக மாறும் வாய்ப்பு உண்டு. சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. எதிரிகளின் பலம் குறையும். உதிரி வருமானங்கள் உண்டு.

குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்யப் புதிய வாய்ப்புகள் வந்துசேரும். ஒருசிலருக்கு எதிர்பாராத விதத்தில் வெளிநாட்டு யோகம் வரலாம். தடைப்பட்ட காரியம் தடையின்றி நடைபெறும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோயின் கொடுமை இப்பொழுது தீரும். பிரச்சினை கொடுத்த பழைய பங்கு தாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த் துக்கொள்ள முன்வருவீர்கள். கிரகப்பி ரவேசம், பெற்றோரின் மணி விழாக்கள், பிள்ளைகளின் மணவிழாக்கள் நடத்துவதை முன்னிட்டு சுபவிரயங்கள் ஏற்படும்.

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். பழைய பணியாளர்கள் விலகினாலும் தகுதியுள்ள புதிய பணியாளர்களை நியமித்து பணவரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். லாபம் அதிகரிக்கும். போட்டிக் கடை வைத்த வர்கள் விலகுவர். புதிய திருப்பங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேலதி காரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். கேட்ட சலுகைகளும் வழங்குவர்.

ராகு-கேது பெயர்ச்சி

8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் ராகுவால் பணவரவு திருப்திகரமாக இருந்தாலும், விரயங்கள் இருமடங்காக உயரும். வீடு மாற்றம், இடமாற்றம், நாடு மாற்றம், உத்தி யோக மாற்றம் போன்றவை எதிர்பார்த்தபடி அமையும். பயணங்கள் அதிகரிக்கும். அடுத்த வர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்று வீர்கள். வாழ்க்கைத் துணை வழியே அடிக் கடி பிரச்சினைகள் ஏற்படலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் எவ்வளவுதான் உதவி செய்தாலும் நன்றி காட்டமாட்டார்கள். இக்காலத்தில் சர்ப்ப தோஷம் இருப்பதால் யோகபலம் பெற்ற நாளில், உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்துகொள்வது நல்லது.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

இந்தப் புத்தாண்டில் 4 முறை செவ்வாய்-சனி பார்வை ஏற்படுகிறது. முரண்பாடான கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. மேலும் செவ்வாய் தனாதிபதி என் பதால் இக்காலத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்திலும், உடன்பிறப்புகள் வழியிலும் போராட்டங் களும், மனக் குழப்பங்களும் கூடும். எதையும் யோசித்துச் செய்வதோடு, திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் மேற் கொள்வது நல்லது.

வளர்ச்சி தரும் வழிபாடு

பிரதோஷ விரதமிருந்து நந்தியை வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்ற நாளில் தஞ்சை பெரியகோவில் நந்தியை வழிபட்டால் சந்தோஷத்தை சந்திப்பீர்கள்.

சனி மற்றும் குருவின் வக்ர காலம்

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகர ராசியிலும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலத்தில் வரவும், செலவும் சமமாகும். விரயாதிபதியாக விளங்கும் சனி பகவான், லாபாதிபதியாகவும் இருப்பதால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். பூமி வாங்கும் யோகம் உண்டு. புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் விரயங்கள் உண்டு.

12.9.2023 முதல் 19.12.2023 வரை மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். 'நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும். இந்த நேரத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

பெண்களுக்கான பலன்கள்

இப்புத்தாண்டில் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். ஒரு சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம் வந்துசேரும். கணவன் - மனைவிக்குள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் பிரச்சினைகள் ஏற்படாது. குடும்பத்திலும் அமைதிகூடும். ஜென்ம குரு விலகிய பிறகு இல்லத்தில் சுபகாரியங்கள் படிப்படியாக நடைபெறும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். பணிபுரியும் பெண்களுக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல் வரலாம். உத்தியோக உயர்வு மற்றும் அரசு வழி வேலைக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும்.


Next Story