தனுசு - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்
ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை
எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் தனுசு ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். மேலும் குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி வக்ரம் பெற்றிருக்கின்றார். எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதில் இடையூறுகள் அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற இயலாது. பொருளாதாரப் பற்றாக்குறையும், புதிய கடன் சுமையும் வரலாம். தொழில் உத்தியோகத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
சனி வக்ர நிவர்த்தி!
ஐப்பசி 8-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுவதால் நிறைய நன்மைகள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். ஆயினும் குடும்பச் சனியின் ஆதிக்கமாக இருப்பதால் குடும்பத்தில் சில குழப்பங்களையும் உருவாக்கலாம். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். விலை உயர்ந்த பொருட்களை விற்கக்கூடிய சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகார வர்க்கத்தினரோடு மனக் கசப்பு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வை தாமதப்படுத்தலாம்.
குரு வக்ரம்!
மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கும் 4-ம் இடத்திற்கும் அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ராசிநாதன் வக்ரம் பெறும் பொழுது நினைத்தது நிறைவேறாமல் போகலாம். நல்ல சந்தர்ப்பங்கள் நழுவிச்செல்லும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்களை சந்திக்க நேரிடும். குருவிற்குரிய வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
நீச்சம் பெறும் சுக்ரன்!
ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகை கிரகமானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது நன்மைதான். எதிர்பாராத விதத்தில் சில நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். வீடு, வாகனம் வாங்க கடன் உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கைகூடும்.
விருச்சிக புதன்!
ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் மறைவிடத்திற்கு வரும்பொழுது நல்லதைச் செய்யும் என்பார்கள். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் அகலும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையைச் செவ்வனே செய்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் நட்பால் நன்மை உண்டு. கலைஞர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவ-மாணவியர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும், பெற்றோர்களின் அன்பும் கிடைக்கும். பெண்களுக்குப் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். இல்லத்தில் நல்லது நடக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:அக்டோபர் 23, 24, 27, 28, நவம்பர் 7, 8, 9, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: பொன்னிற மஞ்சள்.