தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 19 Jan 2023 7:58 PM GMT (Updated: 2023-01-20T01:29:44+05:30)

எழுத்துத் திறமை கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

எதிர்பாராத செலவுகளால் சேமித்து வைத்த தொகையை செலவு செய்யும் சூழல் ஏற்படும். புது வீடு கட்டி குடியேற திட்டமிட்டவர்கள், சற்று நிதானமாக இருக்க வேண்டும். காரணம், கூடுதல் செலவு செய்த பின்னரே அந்த விஷயத்தை செய்ய முடியும். சிலருக்கு குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் நேரலாம். அதிர்ஷ்ட வாய்ப்புகளை எதிர்பார்த்தால் விரயம்தான் ஏற்படும்.

தொழில் துறையினருக்கு, பணியாளர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவு இருக்காது. அவர்களால் தொல்லைகள்தான் ஏற்படும். உடல்நலம் இல்லாதவர்கள், தகுந்த துணையின்றி எங்கும் செல்ல வேண்டாம். பயணங்களில் எச்சரிக்கை தேவை.

குடும்ப பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவது நல்லது. பெண்களுக்கு சுப வழியில் செலவுகள் உண்டு. வாழ்க்கையில் கடந்த காலங்களில் நடந்த கசப்பு உணர்வுகள் மாறும்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் இன்னல்கள் அகலும்.


Next Story